பட்டியல்

 • ஆடலியக்கங்கள்
 • ஆண்டுகள்
 • தமிழர் உடைகள்
 • தமிழர் உணவுகள்
 • தமிழர் திருமணம்
 • தமிழர் மருத்துவம்
 • தமிழர் விளையாட்டுகள்
 • தமிழிசை
 • தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
 • தமிழ் எண்கள்
 • தமிழ்த் திங்கள்
 • நாட்டுப் பண்
 • நாட்டுப்பாடல்
 • நாண்மீன்கள்
 • பெயர்கள்

தி.பி.  உளசசா - நளி - கங-ஞாயிற்றுக்கிழமை

முகவுரை

       முற்காலத்தில் இப்போதைய இந்தியப் பகுதிகளில் முழுவதும் தமிழ்மொழியே பேசப்பட்டு வந்தது. ஆரியர்களின் நுழைவுக்குப்பின் சமசுகிருதமும், அதன் கிளைமொழிகளும் வட இந்தியப் பகுதிகளில்  வல்லாண்மை செய்தன.  தமிழ்மொழி தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் பேசப்படும் மொழியாக ஆனது.  பின்னர் தமிழர்களின் ஒற்றுமை இன்மையாலும், பிறமொழி மயக்கதாலும், ஆரியர்களின் சூழ்ச்சியாலும், ஆரியமொழியான சமசுகிருதம் கலந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட நம் தாய்மொழியான  தமிழ்மொழியானது கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளாகப் பிரிந்தது.  கேசவன், பாணபட்டர், எழுத்தச்சன் போன்றவர்களால் இலக்கணம் எழுதப்பட்டு, புதிய எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு, முறையே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.  தமிழர்களாகிய நாம் கன்னடர்களாகவும், தெலுங்கர்களாவும், மலையாளிகளாகவும் பிரிந்துப் போனோம். ஒன்றே குலம், ஒருவனே இறைவன் என்று வாழ்ந்து வந்த தமிழர்களாகிய நாம் ஆரியர்களின் சூழ்ச்சியால் பல சாதிகளாகவும்,  மதங்களாகவும் பிரிந்தோம்.  பல ஆயிரம் இறைவன் என்ற மடைமையில் வீழ்ந்தோம்.  சாதி, மதம் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களே அல்ல. அவை சமசுகிருதச் சொற்கள் ஆகும். இப்போது பெரும்பான்மையாக இந்து, கிருத்தவம், இசுலாமியம் போன்ற மதங்களாகப் பிரிந்திருக்கிறோம்.  இந்து மதத்தைப் பின்பற்றுகிறத்   தமிழர்கள் தங்கள் பெயர்களைச் சமசுகிருத  மொழியிலேயேச் சூட்டிக்கொள்கின்றனர்.   கிருத்தவ மதத்தைப் பின்பற்றுகிறத்   தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆங்கிலம், எபிரேயம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர்.  இசுலாமிய மதத்தைப் பின்பற்றுகிறத்  தமிழர்கள் தங்கள் பெயர்களை அரபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர். எனவே இனிமேல் தமிழர்களாகிய நாம் சாதி, மதங்களை ஒழித்துவிட்டு நம் பெயர்களைத் தாய்மொழியான தமிழில் சூட்டி மகிழ்வோம். இப்போது தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்பட்டு வருகிறது. அதுவும் சமசுகிருதம் கலந்த மணிபிரவாள நடையையேப் பேசிவருகிறோம்.   சமசுகிருதம் மட்டுமின்றி அரபு, ஆங்கிலம்,  இந்தி, உருது, பாரசீகம், போர்த்துகீசியம், மராத்தி போன்ற பல மொழிகள் கலந்த கலப்பாகத் தமிழ்மொழி உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் வேறுபாடுகளை மறந்து தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், பெயர்ச் சூட்டுவோம்.  மீண்டும்  நாம்  தமிழர்களாய்  ஒன்றிணைவோம்.

அண்மைச் செய்திகள்